அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ’நாசா’ விண்வெளியில் நடந்த முதல் குற்றம் குறித்த புகாரை விசாரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anne.jpg)
விண்வெளி வீரர் அன்னே மெக்லேன் மற்றும் சம்மர் வேர்டன் ஆகிய இருவரும் கடந்த கடந்த 2014- ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இந்தநிலையில் தான் மெக்லைன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபோது தனது தகவல்களை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடியுள்ளதாக சம்மர் வொர்டன் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி மெக்லைனிடம் விசாரணை நடைபெற்றது. விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மட்டுமே பார்த்தாகவும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக நாசா தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
Follow Us