Advertisment

அயர்ன் மேனை காப்பாற்ற நாசாவுக்கு கோரிக்கை; பதிலளித்த நாசா...

nas

Advertisment

'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் அந்த ட்ரைலரில் அயர்ன் மேன் தனியாக விண்வெளியில் மாட்டிக்கொண்டிருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனை பார்த்த மார்வெல் ரசிகர் ஒருவர் அயர்ன் மேனை காப்பாற்ற உதவுமாறு நாஸாவுக்கு ட்வீட் செய்திருந்தார். நாசா அந்த டீவீட்டுக்கு பதில் அளித்துள்ளது. அதில், முதலில் அவென்ஜர்ஸ் சென்ற விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுங்கள், அப்படி தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், பூமியிலிருக்கும் எங்கள் குழுவுடன் இணைந்து அவர்கள் விண்கலத்தை ஸ்கேன் செய்து காணாமல் போனவரை கண்டுபிடிக்கலாம் என கூறியுள்ளது. நாசாவின் இந்த பதிவு மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

marvels avengers NASA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe