Advertisment

குருத்வாராவை முற்றுகையிட்டு கல்வீச்சு... பாகிஸ்தானில் பரபரப்பு...

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது பிறப்பை போற்றும் விதமாக அவர் பிறந்த இடத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா ஒன்று கட்டப்பட்டுள்ளது.

Advertisment

nankana sahib gurudwara issue

இதில் நேற்று நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் வழிபடு நடத்திக்கொண்டிருந்த போது, குருத்வாராவை முற்றுகையிட்ட ஒரு கும்பல் குருத்வாரா மீதும், அங்கிருந்த யாத்திரீகர்கள் மீதும் கற்களை கொண்டு தாக்கியுள்ளது. இதனால் வழிபாட்டிற்காக சென்ற சீக்கியர்கள் குருத்வாரா உள்ளேயே சிக்கிக்கொண்டு தவித்தனர். பின்னர் அந்த கூட்டம் கலைக்கப்பட்டது. அந்த குருத்வாரா இருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் தான் இந்த முற்றுகையில் ஈடுபட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் இந்த குருத்வாரா முற்றுகையிடப்பட்டதால் சீக்கியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe