ADVERTISEMENT

தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு... நாமல் ராஜபக்சே அறிக்கை

11:23 AM Nov 19, 2019 | santhoshkumar

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இந்நிலையில் இலங்கையின் எட்டாவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் 8-வது அதிபர் தேர்தல் 16.11.2019 நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 வாக்குகள் (41.99%) பெற்று தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெற்ற நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 8-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இலங்கை அதிபராக பதிவியேற்றப்பின் உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, “இந்த நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாளான உதவிகள் அனைத்தையும் செய்வேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் முழு மூச்சுடன் இறங்கி செயல்படுவேன். நாட்டிலுள்ள புறாதானமான அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மதம், இனம் என்று பாராமல் எல்லா மக்களையும் ஒரேவிதமாக வழிநடத்துவேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை குறித்து தமிழகத்தை சேர்ந்த வைகோ, திருமாவளவன், ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து மகிந்த ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக தலைவர்களே!

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/wKtvybkLwv


அந்த அறிக்கையில், “2009ல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கட்சியான திமுக சார்பிலான நாடாளுமன்ற குழு இலங்கைக்கு வருகை மேற்கொண்டு, வடக்கு-கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சிநேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விஷயம். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார் நாமல்.

மேலும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு... விட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால், எனது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT