ரஜினிகாந்த் குறித்த வதந்தி... விளக்கமளித்த நமல் ராஜபக்சே....

நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என நமல் ராஜபக்சே விளக்கமளித்துள்ளார்.

namal rajapaksa clarifies about rajini visa rejection news

அண்மையில் இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை வந்திருந்தார். அப்போது ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இலங்கை வர அழைப்பு விடுத்தார் அவர். இந்நிலையில் ரஜினிக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள இலங்கை எம்.பி யும், மஹிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே, "நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை. அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை" என தெரிவித்துள்ளார்.

namal rajabakse rajinikanth srilanka
இதையும் படியுங்கள்
Subscribe