மலேசிய முன்னாள் பிரதமர் மற்றும் அவரது மனைவி நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

Advertisment

Najeeb

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மலேசியாவின் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவரது ஆட்சிக்காலம் நடந்துமுடிந்த தேர்தலோடு முடிவுக்கு வந்தது. இந்தத் தேர்தலில் மகாதீர் வெற்றிபெற்று புதிய பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், நஜீப் ரசாக் மற்றும் அவரது மனைவி விடுமுறை நாட்களை வெளிநாடுகளுக்கு சென்று கழிக்க திட்டமிருந்தனர். இந்தத் தகவல்கள் வெளியான நிலையில், மலேசிய குடியுரிமை அதிகாரிகள் நஜிப் ரசாக் வெளிநாடு செல்ல தடைவிதித்துள்ளனர்.

Advertisment

நஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது, 2015ஆம் ஆண்டில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி, ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப் பட்டுள்ளது. அவர்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.