Skip to main content

கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோய்... 6 பேர் பலி!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

canada

 

உலகமே கரோனா பாதிப்பால் அவதிப்பட்டுவரும் நிலையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், மூளையைத் தாக்கும் மர்ம நோய் மக்களை அச்சுறுத்திவருகிறது. இதுவரை அந்த மர்ம நோயால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த மர்ம நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை.

 

இந்த மர்ம நோய் தாக்கியவர்களுக்குத் தூக்கமின்மை, நினைவுத்திறன் குறைதல், பிரமை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்களைப் பார்ப்பது போன்ற பிரமைகளும் இந்த நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படுகிறது. இது கனடா நாட்டு மருத்துவர்களைத் திகைக்கவைத்துள்ளது. அவர்கள் இந்த நோய்க்கான காரணம் தெரியாமல் திணறிவருகின்றனர். இந்த நோய் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்நிலையில், இந்த மர்ம நோய் அச்சமூட்டும் விதமாக இருப்பதாக கனடா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "புதிய மற்றும் அறியப்படாத நோய் அச்சமூட்டுகிறது. நியூ பிரன்சுவிக்கில் வசிப்பவர்கள், நரம்பியல் நோயாக இருக்க வாய்ப்புள்ள இந்த நோய் குறித்து கவலையும் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்” என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சிங்கப்பூரில் பரவும் உருமாறிய கொரோனா தொற்று' -அமைச்சர் மா.சு பேட்டி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
'Transformed corona infection spreading in Singapore' - Minister M. Su interview

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தாக்குதல் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நேற்றிலிருந்து தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வேளச்சேரியில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களுக்கு அரை கிலோ ப்ளீச்சிங் பவுடர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''வீடுகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சம்ப் என்று சொல்லக்கூடிய அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் போன்ற நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி ,ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்படுகின்ற மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படுபவர்களுக்கு அனைவருக்கும் 1/2 கிலோ ப்ளீச்சிங் பவுடரும் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா என்பது 2019 இறுதியில் தொடங்கி பல்வேறு வகைகளில், உருமாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு வசதியாக 98 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு மூன்று தடுப்பூசியை போட்டு இன்று தமிழக மக்கள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் என்பது தொடர்ச்சியாக பல வழிகளில் வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா என்றும்; ஆல்பா  என்றும்; பீட்டா என்றும்; டெல்டா என்றும்; டெல்டா பிளஸ் என்றும்; ஒமிக்கிரான் என்றும் கூட பல்வேறு வகைகளில் இந்த ஒரு மாற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் நிறைய பேருக்கு ஒரு மாதிரியான கொரோனா தொற்று பரவல் இருப்பது அறியப்பட்டது. உடனடியாக சிங்கப்பூரில் இருக்கக்கூடிய 'நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்' அமைப்பில் பணியாற்றுகின்ற மருத்துவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களிடம் கேட்டபோது, அவர்கள், ஒரு பாசிட்டிவான நோயாளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நெகட்டிவ் ஆகிவிடுகிறது, இது இருமல் மற்றும் சளி ஆகிய இரு உபாதைகளை மட்டுமே கொடுக்கிறது என்கின்ற வகையில் அவர்கள் நேற்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.

Next Story

சோதனை சாவடியில் கார் வெடித்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Car on bridge accident; 2 people lost their lives in america

 

பாலத்தில் வந்த கார் திடீரென்று வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்கா நாட்டிற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இதன் அருகே அமெரிக்கா - கனடா எல்லை சோதனை சாவடி இருக்கிறது. இங்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அங்கு வந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. உடனே, இதனை பார்த்த அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, அந்த காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர். 

 

பாலத்தின் எல்லையில் வந்த வாகனம் ஒன்று வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.