அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம மனிதன் ஒருவன் நடமாடுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

mysterious tv man found in america

வினோதமான டிவி போன்று வேடமணிந்த அந்த மனிதன் நள்ளிரவு நேரத்தில், வெர்ஜீனியாவில் வசிக்கும் மக்களின் வீட்டு வாசல்களில் டிவி பெட்டிகளை விட்டு சென்றுள்ளான். தலையில் ஒரு டிவியை அணிந்துக்கொண்டு இரவு நேரத்தில் சுமார் 60 பழைய தொலைக்காட்சி பெட்டிகளை அங்கு வசிக்கும் மக்களின் வீட்டு வாசல்களில் விட்டு சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

Advertisment

அந்த வினோதமான நபர் குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த மர்ம டிவி மனிதன் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீதிகளில் உலாவும் இந்த மர்ம மனிதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வருகின்றனர்.