கடந்த 2001 முதல் 2008வரை பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷரப்.
இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரஃப்-க்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பெஷாவர் சிறப்பு நீதிமன்றம்.
தேசத்துரோக வழக்கில் முஷரப்புக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக 2013ஆம் ஆண்டு முஷரப் மீது வழக்கு தொடரப்பட்டது.
தற்போது இவர் உடல்நலக் குறைவால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.