ADVERTISEMENT

தாய் காண்டாமிருகத்தை கொம்புக்காக கொன்ற கும்பல்; பிரியமறுத்த குட்டி காண்டாமிருகம்

04:43 PM Sep 02, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விலங்குகளின் ரோமம் மற்றும் கொம்புகளை வேட்டையாடி கடத்தும் கும்பல் அரியவகை பெண் வெள்ளை காண்டாமிருகத்தை கொன்றதோடு அதன் குட்டி காண்டாமிருகத்தையும் தாக்கியுள்ளனர். ஆனால் அந்த குட்டி காண்டாமிருகமோ தாயின் பிரிவை தாங்கமுடியாமல் பூங்காவில் அலைந்து திரிந்து வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் குரூஜர் தேசிய பூங்கா அமைந்துள்ளது அங்கு உள்ள அரியவகை வெள்ளை நிற பெண் காண்டாமிருகம் ஒன்று குட்டி ஒன்றை ஈன்றது அந்த குட்டிக்கு ஆர்தர் என்று பெயர்வைத்து செல்லமாக பார்த்துவந்தனர் பூங்கா நிர்வாகத்தினர். இப்படிபட்ட நிலையில் அந்த பெண் காண்டாமிருகம் சர்வதேச ரோமம் மாற்றும் காண்டாமிருக கொம்புகளை கடத்தும் கும்பலால் கொல்லப்பட்டது. அப்போது அருகில் இருந்த அந்த குட்டி காண்டாமிருகத்தையும் அந்த கும்பல் கோடரியால் தாக்கியுள்ளனர் அப்போது தாயை பிரியமுடியாமல் சுற்றிவந்துள்ளது.

அந்த குட்டி காண்டாமிருகத்திற்கு கொம்பு முளைக்காததால் அதை தாக்கிவிட்டுமட்டும் சென்றுவிட்டனர். ஆனால் அம்மாவின் பிரிவை தாங்கமுடியாத ஆர்தர் அம்மா இறந்த இடத்தை சுற்றி சுற்றி வருவதாக கம்பிரியா விலங்குகள் பூங்காவின் தலைமை செயல் அதிகாரி கேரன் புரூவர்கூறியுள்ளார். கொஞ்சநாட்கள் கழித்து இந்தநிலை மாறும் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த குட்டி காண்டாமிருகம் தற்போது பூங்காவால் சிரத்தையுடன் பராமரிக்கப்பட்டுவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT