Advertisment

மும்பை தாக்குதல் சதிகாரர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, கடல்மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ், இச்சம்பவத்தின் 11-வது நினைவு தினத்தையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Advertisment

அதில், " 11 ஆண்டுகளுக்கு முன்பு, பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலால் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேரின் உயிர் பறிபோனது. அவர்களை நினைவுகூர்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

America
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe