
இலங்கை அரசுக்கும்- விடுதலைப்புலிகளுக்கும் நடைபெற்றஉள்நாட்டுபோரில் உயிரிழந்த, தமிழ் மக்களின் நினைவாகமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூண், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019 ஆண்டு அமைக்கப்பெற்றது. அதன்பிறகு வருடந்தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று (08/01/2021) இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மாவீரர்நினைவுத்தூண் மற்றும் பொங்கு தமிழ் நினைவுத்தூண் ஆகியவற்றை இடிக்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தமிழ் மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் போராட்டத்தில் இறங்கியதால், அவற்றைஇடிக்கும்முயற்சி கைவிடப்பட்டது. மேலும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்ததைஎதிர்த்து அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பலத்தஎதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தமிழகதலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுகபொதுச்செயலாளர் வைகோ, வரும் 11 ஆம் தேதி இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் எனஅறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)