கதச

இலங்கை அரசுக்கும் - விடுதலைப்புலிகளுக்கும் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்த, தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019 ஆண்டு அமைக்கப்பெற்றது. அதன்பிறகு வருடந்தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

Advertisment

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மாவீரர் நினைவுத்தூண் மற்றும் பொங்கு தமிழ் நினைவுத்தூண் ஆகியவற்றை இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தமிழ் மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் போராட்டத்தில் இறங்கியதால், அவற்றை இடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. மேலும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்ததை எதிர்த்து அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் விரைவில் மீண்டும் கட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment