Advertisment

வாரன் பஃபெட் அளித்த தானம்... உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்...

mukesh ambani becomes richer than warren buffett

Advertisment

உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார் முகேஷ் அம்பானி.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின்படி, முகேஷ் அம்பானி தற்போது உலகின் எட்டாவது மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முடங்கியுள்ள சூழலில், உலக கோடீஸ்வரர்கள் நஷ்டத்தைச்சந்தித்து வருகின்றனர். ஆனால் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்நிறுவனத்தை லாபமீட்ட வைத்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களில் ஃபேஸ்புக், சில்வர் லேக் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து சுமார் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இதன்மூலம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்துள்ளது. இதன்மூலம் இன்றைய நிலவரப்படி, 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், 67.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள வாரென் பஃபெட்டினை உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி. இதில், வாரென் பஃபெட் தனது சொத்திலிருந்து 2.9 பில்லியன் டாலர்களை சில தினங்களுக்கு முன்பு தொண்டு நிறுவனம் ஒன்றுக்குத் தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

reliance mukesh ambani warren buffett
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe