Advertisment

2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி தேர்வு

msu

Advertisment

2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று இரவு தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். 2-ம் இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணும், 3-வது இடத்தை வெணிசுலா நாட்டைச் சேர்ந்த பெண்ணும் பெற்றனர். 2018-ம் ஆண்டுக்கான 67-வது பிரபஞ்ச அழகிப்போட்டி, தாய்லாந்தில் உள்ள நான்தாபுரி மாநிலத்தில் நடைபெற்றது. 94 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் சார்பில் மும்பையைச் சேர்ந்த நேஹல் சுதாஸமா என்ற பெண் பங்கேற்றார். அவர் அரையிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேற்றப்பட்டார். இப்போட்டியில் 2-வது இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டமாரின் கிரீனும், 3-வது இடத்தை வெணிசுலாவின் ஸ்டெபானி கட்டர்ஸும் பெற்றனர்.

miss universe philippines South Africa thailand
இதையும் படியுங்கள்
Subscribe