MP who proposed in Parliament; A boisterous assembly

நாடாளுமன்றத்தில் சக எம்.பி. மீது தனது காதலை வெளிப்படுத்திய எம்.பி.யின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்எம்.பி. நாதன் லேம்பர்ட். இவர் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக உரையாற்றினார். உரையாடிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது சக எம்.பி. ஆன நோவா எர்லிச் என்பவரை பார்த்து திருமணம் செய்து கொள்வோமா என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisment

மேலும், தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும் பின் இரவில் அதைக் கொண்டு வந்து தருவதாகவும் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் லேம்பர்ட். யாரும் எதிர்பாராத நேரத்தில் இப்படி கூறியதால் நாடாளுமன்றம் சிறிது நேரம் அதிர்ச்சிக்குள்ளாகி பின்னர் லேம்பர்டிற்கு ஆதரவாக ஆரவாரம் செய்தது. நோவா எர்லிச்சிற்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் நாதன் லேம்பர்டின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டம்முடிந்த பின் இது குறித்து பேசிய நாதன் லேம்பர்ட், நோவா எர்லிச் மீதான தனது காதலை சிறந்த தருணத்தில் சிறப்பான முறையில் வெளிப்படுத்த தீர்மானித்திருந்ததாகவும் கோவிட் பெருந்தொற்று காரணமாக காதலைவெளிப்படுத்த சரியான நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார். மேலும், நாடாளுமன்றத்தை விட சிறப்பான இடம் இல்லை என்று கருதி நாடாளுமன்றத்திலேயே காதலை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். எம்.பி. லேம்பர்ட் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.