அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் ட்ரம்ப்பைபதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 230-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியபுகாரில் ட்ரம்ப்புக்குஎதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற ட்ரம்ப்க்குஎதிரான இரண்டாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ட்ரம்ப்புக்குஎதிரான இந்த இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும்.செனட் சபையில் விசாரணை நடத்தி அதன் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதனால் ட்ரம்ப்பின் பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை.