The mother who lost her newborn baby in a microwave oven in america

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் பகுதியைச் சேர்ந்தவர் மரிகா தாமஸ் (26). இவருக்கு ஒரு மாதமே ஆன ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி அன்று மரிகா தாமஸ் தனது குழந்தையைத்தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்தப் பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

Advertisment

இதில், குழந்தையின் ஆடை மற்றும் குழந்தையைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தால் கருகி எரிந்து புகை வாசனை வந்துள்ளது. புகை வாசனை வருவது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மைக்ரோவேவ் ஓவனில் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர்.

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மரிகா தாமஸை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத்தெரியவந்தது. தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து பெற்ற தாயே தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.