Advertisment

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்; இந்தியா முன்னேற்றம்..!!!

ggffgfg

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018 ஆம் ஆண்டில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தப்பட்டியலில் இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டை விட 3 இடங்கள் முன்னேறி 78வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 81 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அண்டை நாடுகளான சீனா, 87 வது இடத்திலும், பாகிஸ்தான் கடந்த ஆண்டு இருந்த அதே 117 வது இடத்திலும் உள்ளது. மேலும் ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் மாலத்தீவு 31வது இடத்திலும், பாகிஸ்தான் 33வது இடத்திலும், இந்தியா 41வது இடத்திலும், மலேசியா 47 வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Anti-Corruption corruption India Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe