Advertisment

நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்... 233 பயணிகளின் உயிரைக் காக்க விமானிகள் எடுத்த ரிஸ்க்...

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ321’ ரக பயணிகள் விமானம் 233 பயணிகளுடன் புறப்பட்டது.

Advertisment

moscow flight accident

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென சில பறவைகள் விமானத்தின் 2 என்ஜின்களிலும் மோதின. இதனால் விமானத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை விமானநிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் விமான நிலையத்திற்குள் செல்வதற்குள் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவ ஆரம்பித்தது.

இந்த பதட்டமான சூழலில் சாதுரியமாக செயல்பட்ட விமானிகள் அருகில் இருந்த சமபரப்பான வயலில் விமானத்தை தரையிறக்கினர். இதனால் சிறுவர்கள் உள்பட 55 பயணிகள் காயம் அடைந்தனர். இதற்கிடையில் விமான நிலையத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள், மீட்பு குழுக்கள் மற்றும் ஆம்புலன்சுகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். புத்திசாலித்தனமாக செயல்பட்டு 233 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகளுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

flight Russia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe