ADVERTISEMENT

மொராக்கோ நிலநடுக்கம்; மிரள வைக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

07:14 PM Sep 09, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மொராக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து மொராக்கோவில் அடுத்தடுத்து 6 முறை சிறிய அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி முதற்கட்டமாக 632 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 1037 ஆக அதிகரித்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT