Skip to main content

மொராக்கோ நிலநடுக்கம்; மிரள வைக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Morocco Earthquake; 1,037 people lost their lives

 

மொராக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து மொராக்கோவில் அடுத்தடுத்து 6 முறை சிறிய அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

 

இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி முதற்கட்டமாக  632 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 1037 ஆக அதிகரித்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

8 நாட்கள் நடைபெற்ற தீவிர தேடுதல்; வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
8 days of intensive search; Vetri Duraisamy's recovery

எட்டு நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 8 நாட்களாகத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை மத்தியப் பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர்  தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல் காவல்துறை துணை ஆணையர் அமித் ஷர்மா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மீட்கப்பட்ட அவரது உடலானது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

பட்டாசு ஆலை விபத்து; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Fireworks factory accident; Prime Minister Modi relief announcement

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தா என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் பணியில் இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் அருகே உள்ள 60 வீடுகளுக்கு தீ பரவியதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 லட்சம் நிதியுதவி அளித்து மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட மத்தியப் பிரதேச அமைச்சர் உதய் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் இந்த சம்பவம் குறித்துப் பேசுகையில், “மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பேசினேன். காயமடைந்தவர்கள் ஹோஷங்காபாத் மற்றும் போபாலில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சாலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் விபத்து காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தோர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.