gj

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசு இதனைக்கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்திருந்தது.

Advertisment

அதன்படி, சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், திருமணம், இறப்புக்கு குறிப்பிட்ட நபர்கள் பங்கேற்பு என்று பல்வேறு வழிகாட்டு நெறிகளை அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் மட்டுமே 50 பேர் பங்கேற்கலாம் என்றும், கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.