earth

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவில் கடந்த6-ஆம் தேதிஅதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகிய அந்த நிலநடுக்கத்தால் 35 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 6-ஆம் தேதி சுமார் 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்த திடீர் பேரிடரில் சிக்கிஅத்தீவிலுள்ள 3 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரவசதிதுண்டிக்கப்பட்டது. அதேபோல் பல வீடுகள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டது. பலர் காணாமல் போயுள்ளனர் என அரசு கூறியுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

அங்கு உள்ள டோமரி தீவில்அணு உலைகள்மூன்று இந்த நிலநடுக்கத்தால்பாதிக்கப்பட்டுள்ளது எனவே ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுருந்த நிலையில் சனிக்கிழமை (இன்றைய)நிலவரப்படி 35 பேர் இடர்பாடுகளில் சிக்கி இறந்துள்ளனர். 15 பேர் காணவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.