Advertisment

பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு - பிரிட்டனை ஆட்டுவிக்கும் ஒமிக்ரான் !

omicron

உலகமெங்கிலும் ஓமிக்ரான்வகை கரோனாகுறித்து அச்சம் எழுந்துள்ள நிலையில்,உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனில் ஒமிக்ரான்வைரசால் பாதிக்கப்பட்டுஅண்மையில் ஒருவர் உயிரிழந்தார். இந்தசூழலில்,ஹவுஸ் ஆஃப் காமன்ஸில்பேசிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என கூறியிருந்தார்.

Advertisment

இந்தநிலையில்பிரிட்டனில் தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்தநாட்டில்முதல்முறையாக, ஒரேநாளில்78,610 ஆம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்த தினசரி கரோனாபாதிப்பு உயர்வுக்குஒமிக்ரான்முக்கிய காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது.

Advertisment

பிரிட்டனில் இதுவரை 10,000-கும் மேற்பட்டவர்களுக்குஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனையடுத்துடென்மார்க்கில் அதிகம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தநாட்டில்4000-கும் மேற்பட்டவர்களுக்குஒமிக்ரான்உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 73 பேருக்குஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

India denmark britain OMICRON
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe