இங்கிலாந்தின் அமெஸ்பரி கவுன்சிலின் மேயராகடாக்டர் மோனிகா தேவேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1000 ஆண்டுக்கால இங்கிலாந்தின் அரசியலில் முதல் வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளி என்ற பெருமையைப்பெற்றுள்ளார்.
ஏற்கனவே அமெஸ்பரி கவுன்சிலின் துணை மேயராக இருந்த டாக்டர் மோனிகா தேவேந்திரன் தற்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்பு விழா ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. உலகின் தலைசிறந்த 100 தலைவர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் மேயர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.