Advertisment

கிக்கி சேலன்ஞ்ஜை முறியடிக்கும் மோமோ சேலன்ஞ்!! இந்த ஆஸ் டேக்கை பார்த்தாவது தப்பித்துக்கொள்ளுங்கள்!!

கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டு என நினைக்கும்விஷயங்கள் கூட விபரீதத்தில் முடியும் ஒன்றாக உருவெடுத்துவருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுநீல திமிங்கலம் (ப்ளூ வேல்)எனப்படும் கேம் அதனை தொடர்ந்து அண்மையில் கிக்கி சேலன்ஞ் எனும் அபாய நடனம் தற்போது ட்ரெண்டில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்து ஒன்று புதிதாக உருவெடுத்திருக்குகிறது அதற்கு பெயர்தான் ''மோமோ சேலன்ஞ்''

Advertisment

MOMO

அர்ஜென்டினால்வில் 12 வயது சிறுமி இந்த சவாலை ஏற்றுக்கொண்டு உயிரலிழந்திருக்கிறாள். நாம் உபயோக்கிக்கும் வாட்ஸ் அப், பேஸ் புக், ட்விட்டரில் இந்த ''மோமோ சேலன்ஞ்'' பரவி வருகிறது.

Advertisment

ஆனால் இந்த கேம் ஜப்பானில் தோன்றி வாட்ஸ் அப் மூலம் பரவிவருகிறது என்றே கூறப்படுகிறது. யார் அந்த ''மோமோ '' ஜப்பானில் டோக்கியோ நகரில் வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சியில் ஒரு மிக பூதாகரமான பெண் சிறுமி போன்ற உருவ பொம்மைதான் அந்த ''மோமோ'' ஆனால் இந்த கேம் எப்படி எங்கு ஆரம்பித்தது என்பதுபற்றிய தகவல் இல்லை என்றாலும் உலகம் முழுவதும் எச்சரிக்கை பெற்றுவருகிறது.

கிக்கி சேலன்ஞ்க்கு மெக்சிகோ போலிஸ் விடுத்த எச்சரிப்பு போல ஸ்பெயின் போலீஸும் தற்போது இதற்கான எச்சரிப்புகளை பரப்பி வருகின்றனர்.#PasaDeChorradasஎன்ற ஆஸ் டெக் மூலம் ''மோமோ சேலஞ்ஜை தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த ஆஸ் டாக்கிற்கு#IgnoreNonsenseஎன்பதே பொருள். இந்த மோமோ சேலன்ஞ்ஜை எதிர்கொண்டால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும், மனது அடிமையாகும், தற்கொலை,பணப்பறிப்பு என எல்லாவற்றுக்கும் வழிவகுக்கும் என்பதே அவர்கள் கூறும் அறிவுரை. எனவே இதுபோன்ற சேலன்ஞ் கேம்களை முற்றிலும் தவிர்க்கவேண்டியே இந்த ஆஸ் டெக் பரவிவருகிறது.

Games Video game
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe