Skip to main content

கிக்கி சேலன்ஞ்ஜை முறியடிக்கும் மோமோ சேலன்ஞ்!! இந்த ஆஸ் டேக்கை பார்த்தாவது தப்பித்துக்கொள்ளுங்கள்!!

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டு என நினைக்கும் விஷயங்கள் கூட விபரீதத்தில் முடியும் ஒன்றாக உருவெடுத்துவருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நீல திமிங்கலம் (ப்ளூ வேல்)எனப்படும் கேம் அதனை தொடர்ந்து அண்மையில் கிக்கி சேலன்ஞ் எனும் அபாய நடனம் தற்போது ட்ரெண்டில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்து ஒன்று புதிதாக உருவெடுத்திருக்குகிறது அதற்கு பெயர்தான் ''மோமோ சேலன்ஞ்''

 

MOMO

 

 

 

அர்ஜென்டினால்வில் 12 வயது சிறுமி இந்த சவாலை ஏற்றுக்கொண்டு உயிரலிழந்திருக்கிறாள். நாம் உபயோக்கிக்கும் வாட்ஸ் அப், பேஸ் புக், ட்விட்டரில் இந்த ''மோமோ சேலன்ஞ்'' பரவி வருகிறது. 

 

ஆனால் இந்த கேம் ஜப்பானில் தோன்றி வாட்ஸ் அப் மூலம் பரவிவருகிறது என்றே கூறப்படுகிறது. யார் அந்த ''மோமோ '' ஜப்பானில் டோக்கியோ நகரில் வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சியில் ஒரு மிக பூதாகரமான பெண் சிறுமி போன்ற உருவ பொம்மைதான் அந்த ''மோமோ'' ஆனால் இந்த கேம் எப்படி எங்கு ஆரம்பித்தது என்பதுபற்றிய தகவல் இல்லை என்றாலும் உலகம் முழுவதும் எச்சரிக்கை பெற்றுவருகிறது.

 

 

கிக்கி சேலன்ஞ்க்கு மெக்சிகோ போலிஸ் விடுத்த எச்சரிப்பு போல ஸ்பெயின் போலீஸும் தற்போது இதற்கான எச்சரிப்புகளை பரப்பி வருகின்றனர். #PasaDeChorradas என்ற ஆஸ் டெக் மூலம்  ''மோமோ சேலஞ்ஜை தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த ஆஸ் டாக்கிற்கு #IgnoreNonsense என்பதே பொருள். இந்த மோமோ சேலன்ஞ்ஜை எதிர்கொண்டால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும், மனது அடிமையாகும், தற்கொலை,பணப்பறிப்பு என எல்லாவற்றுக்கும் வழிவகுக்கும் என்பதே அவர்கள் கூறும் அறிவுரை. எனவே இதுபோன்ற சேலன்ஞ்  கேம்களை முற்றிலும் தவிர்க்கவேண்டியே இந்த ஆஸ் டெக் பரவிவருகிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய பதிப்பில் GTA வீடியோ கேம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

GTA video game in new version trailer

 

கடந்த 1997 ஆம் ஆண்டு கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA) என்ற வீடியோ கேம்மை இங்கிலாந்தைச் சேர்ந்த ராக்ஸ்டார் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto) என்பது வாகனங்களைத் திருடிச் செல்லும் கும்பலில் ஒருவராகப் பங்குபெற்று விளையாடும் ஒரு வீடியோ கேம் ஆகும். இந்த வீடியோ கேம்மின் பதிப்பு ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்யப்பட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

 

இதுவரை கிராண்டு தெஃப்ட் ஆட்டோ V வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த பதிப்பு உலகத்தின் இரண்டாவது விற்பனையான கேம் என்ற பெருமையையும், 185 பில்லியனுக்கு அதிகமான பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட கேம் என்ற பெருமையையும் தக்க வைத்துள்ளது. 

 

இந்த நிலையில், கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பை வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI கேம்மின் பதிப்பை விட எந்த கேமும் ரசிகர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், மடிக்கணினி, லேப்டாப் ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களில் விளையாடும் இந்த விளையாட்டு ஆன்ட்ராய்டு மொபைலிலும் விளையாடும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ராக்ஸ்டார் நிறுவனம் தொடங்கப்பட்டு அடுத்த மாதத்தோடு 25வது வருடத்தை எட்டவுள்ளது. ராக்ஸ்டாரின் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்த வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI கேம்மின் ட்ரையிலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தசாப்தங்களில் மிக முக்கியமான பொழுதுபோக்கு வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பு வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்ததையடுத்து கிராண்ட தெஃப்ட் ஆட்டோ கேம்மின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

 

 

Next Story

சந்திரமுகி போல சூகுனா கதாபாத்திரமாக மாறிய இளைஞர்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 A youth who became a Sukuna character like Chandramukhi; Bustle in Ranipet

 

செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும்  வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.