Skip to main content

மோடியின் அமெரிக்க பயணம்!  அலட்சியப்படுத்திய கமலா ஹாரிஸ்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Modi's US tour! Ignored Kamala Harris!

 

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி! அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து உரையாடினார் மோடி.

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பைப் பற்றி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலோ, துணை அதிபருக்குரிய ட்விட்டர் பக்கத்திலோ பதிவு எதையும் வெளியிடவில்லை கமலா ஹாரிஸ். சந்திப்பு முடிந்து பல மணி நேரம் கடந்தும் கூட  எந்த பதிவையும் போடவில்லை.

 

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு படங்களையும் வெளியிட்டுள்ளார்.130 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை தவிர்த்திருக்கிறார் கமலா ஹாரிஸ்! தவிர்த்ததற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவும் இல்லை. 

 

அதேசமயம், நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு ஜாம்பியா நாட்டின் அதிபரை சந்தித்தார் ஹாரிஸ். அந்த சந்திப்பு பற்றிய தகவல்களையும், வீடியோவையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார் ஹாரிஸ். இரண்டு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில், இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை ஹாரிஸ் தவிர்த்திருப்பது, இது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

PM

 

சமூக வலைத்தளங்கள் முழுவதும் இது குறித்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் கமலா ஹாரிஸ் சந்திப்பு குறித்த ட்விட்டைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, "நரேந்திர மோடிக்கு பின்னர், தான் சந்தித்த ஆப்பிரிக்க நாட்டு அதிபர் சந்திப்பு பற்றி ட்விட் செய்துள்ள கமலா ஹாரிஸ், அதற்கு முன் நடந்த மோடியின் சந்திப்பு குறித்து பதிவு எதுவும் இட்டதாக நான் பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் மூலம் சர்வதேச அரங்கத்தில் இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவமதித்தாரா? என்ற சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வேகமெடுத்துள்ளன!

 

இந்த நிலையில், உலக அளவில் சர்ச்சைகள் எழுந்ததால் வெள்ளை மாளிகையின் அறிவுறுத்தலின் பேரில் மோடியின் சந்திப்பைப் பதிவு செய்தார் கமலா ஹாரிஸ்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது” - கமலா ஹாரிஸ்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Kamala Harris says Just thinking about Donald Trump as president is scary

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “ நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான், நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறேன். டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும் போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று கூறினார். 

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.