அண்மையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

Advertisment

modi wishes borris johnson

அப்போது, பிரதமராக பதவியேற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பேசியுள்ளார். இந்த உரையாடலின் போது, இந்திய சுதந்திர தினத்தின்போது லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டம் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்துக்காக போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். அதைப்பின்னர் இந்திய தூதரகம், அதன் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.