Advertisment

அடுத்த பாக். பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் மோடி!?

pakisthan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதிநாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில்நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின்தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிகஇடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர்இம்ரான்கான்தான்அடுத்த பிதாமர் என்பது 95 சதவிகிதம் உறுதியான நிலையில் இம்ரான்கான் பிரதமராக பதவியேற்கும்பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடியும் பங்குபெற முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.

பாகிஸ்தானில் தேர்தலுக்கு முன்ப நடந்தமனித வெடிகுண்டு சம்பவதில் 70 பேர்பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில்54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது. இறுதியில் பலி எண்ணிக்கை 133-ஐ தொட்டது இப்படி தேர்தலுக்கு முன்னரே பல தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்று பரபரப்பாக்கியது.

Advertisment

இந்தநிலையில், பலத்த ராணுவ பாதுகாப்புகளுடன்மொத்தம் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதிளுக்கும்தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கையும்தொடங்கியது. தனி பெருபான்மைக்கு 130 இடங்கள் தேவை என்ற போதில் 119 இடங்களில்இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிமுன்னிலையில் இருந்துவருகிறது.ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள்வெளியிடுவது தாமதமானது. பிறகு வெளியிடப்பட்ட முடிவுகளில்தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. அக்கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இஸ்லாமாபாத் தொகுதியில் நின்ற இம்ரான்கான் 92 ஆயிரத்து 891 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதனால்இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியே ஆட்சியை பிடிக்க போவது உறுதி அடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிற நிலையில் அவர் பதவியேற்கும் விழாவில் இந்திய பிரதமர் மோடி அழைக்கப்படவிருப்பதாகவும், இந்தியா பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தைக்கு இந்த சந்திப்புஉதவும் என்ற நோக்கில் இந்த அழைப்பு இருக்கும்எனவும் செய்திகள் வந்துள்ளன.

imran khan modi Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe