ADVERTISEMENT

ஜிங்பின் வாழ்த்தும், புதினுடனான தனிச் சந்திப்பும்... ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி...

10:31 AM Jun 14, 2019 | kirubahar@nakk…

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நேற்று தொடங்கியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2 நாட்களுக்கு நடை பெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியும் நேற்று கிர்கிஸ்தான் சென்றுள்ளார். உறுப்பு நாடுகளை தவிர்த்து ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். இந்த 2 நாள் கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிங்பின், ஆப்கானிஸ்தான் அதிபர், மற்றும் ரஷ்யா அதிபர் புதின் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான மோடிக்கு ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். அதுபோல வரும் ஜூலை 15-ம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ள சீன அதிபருக்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி தனித் தனியாக சந்தித்துப் பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT