இறந்துபோன தந்தை சடலமாக இருக்கும்பொழுது இறந்த தனது தந்தையுடன்மாடல் அழகிசெல்ஃபிஎடுத்த சம்பவம் நடந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WER.jpg)
செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜெலிகா லூபியிக்என்பவர் அந்நாட்டின் பிரபலமான மாடல் அழகி. அண்மையில் உயிரிழந்த தனது தந்தையின் உடல் முன் நின்று செல்ஃபி எடுத்து இன்ஸ்டாக்ராமில் போட்டுள்ளார். அதில், தந்தையே உங்களை முடிந்தவரை காப்பாற்றினோம் ஆனால் உங்களது 67-வது வயதில் நீங்கள் இறந்து எங்களை பிரிந்துவிட்டீர்கள்என்றும் என் இதயத்தில் இருப்பீர்கள் என்று அந்தசெல்ஃபிபுகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lolol.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதை பார்த்த அவரது ரசிகர்கள் அந்த மாடல் அழகியின் இந்த செயலுக்கு பெருத்த கண்டனத்தை தெரிவித்தனர். அதில் அவரது ரசிகர் ஒருவர் ''மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள்'' என்று கமண்ட் செய்துள்ளார். அதேபோல் வேறொருரசிகரோ ''இந்த செயலிலேயே தெரிகிறது நீங்கள் உங்கள் தந்தையை எப்படி பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று'' எனகமண்ட் செய்துள்ளார். இப்படி பல எதிர்கருத்துக்களுக்கு பிறகு அந்த பதிவு நீக்கப்பட்டது.செல்ஃபிமோகம் என்பதற்கு ஒருஅளவே இல்லாமல் போய்விட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது அந்த மாடல் அழகியின் இந்த செயல்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)