Advertisment

கார் மீது விமானம் மோதி விபத்து... (வீடியோ)

minnesota flight lands on road and crashes suv

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

Advertisment

அமெரிக்காவின் மினசொட்டாவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் ஒரு நெடுஞ்சாலையில் ஒற்றை என்ஜின் விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கியது. பெல்லாங்கா வைக்கிங் வகையிலான இந்தச்சிறிய விமானம், வானில் பறந்துகொண்டிருக்கையில், திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மினியாபோலிஸ் நெடுஞ்சாலையில் இந்த விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அப்போது அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில், இந்த விமானம் மோதியது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

flight America
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe