mine collapsed in congo

Advertisment

காங்கோ நாட்டின் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசின் கமிட்டுகா பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று பிற்பகல் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 'டெட்ராய்ட்' என்ற இந்த தங்க சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வந்தது. இந்நிலையில், நேற்று பிற்பகல் மழை காரணமாக இந்த சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்கத்தில் பணியாற்றிய 50 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisment