Skip to main content

கூகுளை காப்பியடித்து ஆன்ட்ராய்டு செயலி தயாரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

 

mic

 

விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு மென்பொருள்கள் மற்றும் ஆப் தயாரித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்ட்ராய்டு வருகைக்கு பின்னர் அதற்கான ஆப்களையும் தயாரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் செய்தி வாசிக்க பிடிக்காதவர்களுக்காக, அதனை காதால் கேட்டுக்கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 'ஹம்மிங் பேர்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, நாம் எது சம்பந்தமான செய்திகளை அதிகமாக பார்க்கிறோம் என்பதை சேமித்து அதன் அடிப்படையில் நமக்கான செய்திகளை தரும். மேலும் நாம் விரும்பும் செய்திகளை மீண்டும் கேட்கவும், வேண்டாத செய்திகளை ஸ்கிப் செய்யும் வசதியும் இதில் உள்ளது. 28 மொழிகளில் செய்தியை தரும் இந்த செயலி முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம்தான் இதே போன்ற செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் செய்திகளை கேட்கும் செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. தற்பொழுது அதற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் இந்த செயலியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Applications are welcome for Computer Tamil Award

 

2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் மற்றும் செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் கடந்த 2020, 2021, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்திலோ, http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

 

கூடுதல் விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 என்ற தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (31.12.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

நியூஸ் க்ளிக் அலுவலகத்திற்கு சீல்!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

News click office seal

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.  இந்நிலையில் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்ததால் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே நியூஸ் க்ளிக் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.