(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலகபுகழ் பெற்ற இசை ஜாம்பவானாகவும் நடனத்தின் புகழ் குறியீடாகவும் இருந்தவர்மைக்கெல் ஜாக்சன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அதிக மயக்க மருந்துகள் எடுத்துக்கொண்டதால் மைக்கெல் ஜாக்சன் உயிரிழந்தார். தற்போது அவரது தந்தை ஜோ ஜாக்சன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.அவருக்கு வயது 89.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அண்மையில் லாஸ்வேகாஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்திருந்த ஜோ ஜாக்சன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 1965-ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய ஜாக்சன் பிரதர்ஸ் என்ற இசைக்குழு மூலம் இவரது மகனானமைக்கெல் ஜாக்சன் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார். அதேபோல் அந்த இசைக்குழுவிற்கு ஜான்சன் 5 என்றும்மைக்கெல் ஜாக்சன் 1966-ஆம் ஆண்டு பெயர் மாற்றினார்.
அவரது தந்தை ஜோ ஜாக்சன் ஆரம்பித்த அந்த இசைக்குழுவேமைக்கெல் ஜாக்சனின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமானது. இப்படிமைக்கெல் ஜாக்சனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை ஜோ ஜாக்சன் மறைவுமைக்கெல் ஜாக்சன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.