Advertisment

பாலியல் குற்றச்சாட்டு; இனி மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் ஒலிபரப்பப்படாது...

hgfjghjgh

Advertisment

இசை உலகின் முடிசூடாமன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். திறமை மற்றும் புகழின் அளவுக்கு சர்ச்சைகளையும் சம்பாதித்தவர். அப்படிப்பட்டவரை பற்றி தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவரும், சிறுவர்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டினர். இதனை கொண்டு ஒரு ஆவணப்படமும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தார் சார்பில் இந்த புகார் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புகாரின் காரணமாக இனி மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இனி பிபிசி ரேடியோவில் ஒலிபரப்பப்படாது என பிபிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த மாதம் 24 முதல் அவரது பாடல்கள் பிபிசி யில் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

michael jackson
இதையும் படியுங்கள்
Subscribe