Skip to main content

25 வயது பெண்ணை கொடூரமாக கொன்ற கணவன்.... நீதிக்காக நாடு முழுவதும் போராடும் மக்கள்...

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

25 வயது பெண் ஒருவரின் கொடூரமான கொலை மற்றும் அவரது சிதைந்த உடலின் படங்கள் மெக்ஸிகோவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

mexican woman Ingrid Escamilla case

 

 

25 வயதான இங்க்ரிட் எஸ்கமில்லா மெக்ஸிகோவில் தனது கணவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ(46) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வார இறுதியில் அந்த பெண் காணாமல் போனதாக போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த பெண் கொல்லப்பட்டது தெரியவந்தது. அந்த பெண்ணின் வீட்டில் அவரது உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து அந்த பெண்ணின் கணவனை விசாரித்த போலீசார், அவரே தனது மனைவியை கொலை செய்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

திருமணமானது முதல் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகவும், அப்படி ஒரு வாக்குவாதத்தில் போது தனது மனைவியை கத்தியால் கழுத்தில் குத்தி கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க உடலில் உள்ள தோல்பகுதிகளை உரித்தெடுத்து, உடலை துண்டுகளாக்கி சாக்கடையிலும் வீசியுள்ளார்.

இந்த குற்றத்திற்காக அப்பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில், இறந்த பெண்ணின் சேதப்படுத்தப்பட்ட உடல் பாகங்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதால், அந்நாட்டில் இந்த விவகாரம் பூதகரமாகியுள்ளது. மேலும், அந்த பெண்ணின் கொலைக்கு நீதி வேண்டி மெக்ஸிகோ முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1000 ஆண்டுகள் பழமையான ஏலியன்ஸ் உடல்கள்?.. அதிர்ச்சியூட்டும் தகவல்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Shocking information released is 1000 year old Aliens bodies?

 

இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் அல்லாது வேறு ஏதேனும் உயிரினங்கள் மற்ற கிரகங்களில் உள்ளதா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. ஏலியன்ஸ் இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் அது தொடர்பான கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

 

மெக்சிகோ நகரில் சில தினங்களுக்கு முன்பு ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த இரண்டு ஏலியன்ஸ்கள் மனிதர்கள் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. ஏலியன்களைப் போல் தோற்றம் கொண்ட அந்த உடல்கள் அளவில் சிறியதாகவும், கைகளில் மூன்று விரல்களுடனும், தலையின் பின்பகுதி பெரியதாகவும் இருந்தது.

 

மம்மிகளாக்கப்பட்ட அந்த உடல்களில் ஒன்றானது 1800 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்றும் மற்றொன்று 200 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்றும் மரபணு சோதனையில் தெரியவந்தது.  மேலும், உடல்களைப் பற்றி கார்பன் டேட்டிங் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், அந்த உடல்கள் மனிதர்களின் உடல்கள் அல்ல என்பது உறுதி செய்தனர். அதனால், தற்போது வரை இந்த உடல்கள் மனிதர்கள் அல்லாது உடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

கடந்த 2017ஆம் ஆண்டு முதல், இந்த உடல்கள் வேற்றுகிரக மனிதர்களின் உடல்களா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். மேலும், இந்த உடல்கள் பெரு நாட்டில் உள்ள நாஸ்கா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், மனிதர்கள் அல்லாது இந்த உடல்களை தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தும் நோக்கத்தில் மெக்சிகோவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு உடல்களின் மரபணுக்களை ஆய்வு செய்து அவை வேற்று கிரகவாசிகளுடையதா? என்பதை தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபிக்க இருக்கிறார்கள். இந்த ஆய்வு வெற்றி பெற்றால் பூமியில் வேற்றுகிரகவாசிகளின் உடல்களை கண்டறிந்த முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெரும். இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

கடல் கடந்து காதலனை கரம் பிடித்த மெக்சிகோ பெண்; தமிழ்நாட்டு ஸ்டைலில் குத்தாட்டம்!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

 Pollachi man who married a Mexican woman

 

கோவை மாவட்டம் பொள்ளாட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெக்சிகோ நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குப்புச்சிபுதூரைச் சேர்ந்த இளைஞர் சவுத்திரி ராஜ் மெக்சிகோ நாட்டிற்கு படிக்க சென்றுள்ளார். இவரது தந்தை தண்டாயுதபாணி குப்புச்சிபுதூரில் டீ கடை நடத்தி வருகிறார். சவுத்திரி ராஜ் கோவையில் படிப்பு முடிந்த கையோடு மெக்சிகோவில் மேற்படிப்பை தொடர்ந்துள்ளார். படிப்பு முடிந்த பிறகு அங்கேயே வேலையும் பார்த்து வந்த சவுத்திரி ராஜ், அப்போது தன்னுடன் பணிபுரிந்து வந்த டேனியலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

 

Pollachi man who married a Mexican woman

 

இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருவீட்டாரின் சம்மதத்துடன் பொள்ளாச்சியில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதற்காக பெண்வீட்டார் மெக்சிகோவில் இருந்து பொள்ளாச்சி வந்து திருமணத்தில் கலந்துகொண்டனர். திருமணத்தின் போது மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் தமிழ்நாட்டு ஸ்டைலில் நடனமாடி அசத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.