Advertisment

மெக்ஸிகோவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை...!

g

Advertisment

மெக்ஸிகோ நட்சத்திர உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவரை காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பத்திரிகையாளர் உயிரிழந்தார்.

மெக்ஸிகோ கிழக்குப் பகுதியில் உள்ள மிலியானா சபாதா எனும் நகரில் உள்ள நடசத்திர உணவு விடுதியில் சனிக்கிழமை,மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஒருவர் ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளதாவது, “மெக்ஸிகோ கிழக்குப் பகுதியில் உள்ள டபாஸ்கா மாகாணத்தில், மிலியானா சபாதா எனும் நகரத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் சனிக்கிழ்மை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

காரில் வந்திறங்கிய சிலர் உணவு விடுதிக்குள் நுழைந்து திடீரென்று அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த, ஜீசஸ் ராமோஸ் ரோட்ரிக்ஸ் எனும் பத்திரிகையாளரை சுட்டு கொன்றுள்ளனர். இவர் உள்ளூர் 99.9 எப்.எம் வானொலியில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

journalist killed
இதையும் படியுங்கள்
Subscribe