படுக்கையறையில் விழுந்த விண்கல்; பதறியடித்த குடும்பத்தினர்

 A meteor fell in the bedroom; A distraught family

வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு விண்கல் ஒன்று படுக்கையறையில் விழுந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் வீட்டின் மேற்பகுதியை துளையிடும் அளவிற்கு வேகமாக வந்த விண்கல் ஒன்று சுவற்றை துளையிட்ட வேகத்தில் படுக்கையறையில் விழுந்துள்ளது. இதனால் பதறியடித்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஈட்டா அக்வாரிஸ் விண்கல் மழை என்பது அங்கு ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். தற்போது விழுந்துள்ள இந்த விண்கல்ஹாலியன் எனும் வால் நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விண்கல் ஒன்று வீட்டை துளையிட்டுக் கொண்டு படுக்கை அறையில் விழுந்தது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

America meteor Space
இதையும் படியுங்கள்
Subscribe