Messi beat Ronaldo again

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வழி நடத்திய அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியதுஅர்ஜென்டினா. மூன்றுக்கு மூன்று (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர்.

Advertisment

Messi beat Ronaldo again

பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத இந்த இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா பெற்ற வெற்றியை உலக அளவில் பல நாட்டுரசிகர்களும் கண்டுகளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் உலகக் கோப்பையை ஏந்தியபடி மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்ஐந்தரை கோடி லைக்குகள் பெற்றுள்ளது. ஒரு விளையாட்டு வீரரின் புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்குகள் கிடைத்தது இதுவே முதல் முறை என்கிறார்கள். இதற்கு முன்பு ஆடை நிறுவனத்தின் விளம்பரத்திற்கு மெஸ்ஸியுடன் செஸ் விளையாடுவதுபோல் ரொனால்டோ வெளியிட்ட புகைப்படம்நான்கே கால் கோடி லைக்குகள் பெற்றிருந்தது அதிகபட்சம் என்ற நிலையில், அதனையும் முறியடித்துள்ளது மெஸ்ஸியின் பதிவு.

Advertisment