சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நேற்று நடந்துள்ளது.
இந்த நிகழ்வு ஒரு நூற்றாண்டில் அதிகபட்சமாக 13 முறை மட்டுமே நிகழும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் கிரகம் கடக்கும் இந்த நிகழ்வை, பூமியிலுள்ள நவீன தொலைநோக்கு சாதனைகள் வழியாக காண முடியும். சூரியன் மேல் ஒரு சிறிய புள்ளி நகர்வது போன்று தோன்றும் இந்த நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில், இதற்கடுத்து 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதன் சூரியனை கடக்கும் நிகழ்வு மே அல்லது நவம்பர் மாதத்தில் மட்டுமே புவியிலிருந்து காணும் திசையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.