Members of the European Parliament stand up and applaud in support of the President of Ukraine!

Advertisment

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு இடமளித்து தங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டிருந்தார். இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று (01/03/2022) நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு இடம் கொடுத்து, தங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், தங்களது மண்ணை தங்களால் காக்க முடியும்; ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்றார்.

Members of the European Parliament stand up and applaud in support of the President of Ukraine!

Advertisment

அப்போது, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக கைதட்டினர். இச்சூழலில் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ப்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று (01/03/2022) இரவு நடைபெற்ற நிலையில், அது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.