trump

எங்கள் மகன்பாரன் ட்ரம்ப்பிற்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என ட்ரம்பின் மனைவியான மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அவரது மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது நடந்த பரிசோதனையில் ட்ரம்ப் மகன் பாரன் ட்ரம்ப்பிற்கு கரோனா தொற்று இல்லை என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மெலானியா ட்ரம்ப் தனது மகனுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "என்னுடைய பயம் உண்மையானது. என் மகனுக்கு மீண்டும் நடந்த கரோனா பரிசோதனையில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இளம் வயது என்பதால், அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. தற்போது பாரன் முழுமையாகக் குணமடைந்துவிட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப்பதிவில் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.