syria

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சிரியாவைச் சேர்ந்த எட்டு வயது குழந்தை மாயா முகமது அலி மெர்ஹி. இவருடைய தந்தையைப் போலவே இவருக்கும் இரண்டு கால்கள் இல்லை. பிறவியிலேயே இருவரும் கால்கள் இழந்தவர்கள். மாயாவுக்கு செயற்கைக் கால்கள் கொடுக்க வசதியில்லை. எனவே, தனது மகளுக்காக தகர டப்பாக்களை பயன்படுத்தி இரண்டு செயற்கைக் கால்களை தாயார் செய்து கொடுத்திருக்கிறார். டப்பாவுக்குள் பஞ்சை நிரப்பி தயாரிக்கப்பட்ட இந்தச் செயற்கைக் காலுடன் மாயா, சிரியா போர் முகாம் ஒன்றி்ல் நடமாடுகிறார். இது உலகம் முழுவதும் வைரலாகி இருக்கிறது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">