/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgsgd.jpg)
மொரிஷியஸ் தீவைச் சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உடைந்த கப்பலிலிருந்து வெளியேறும் எண்ணெய் காரணமாக கடல் பகுதி முழுவதும் கடுமையாக மாசடைந்து வருகிறது.
ஜூலை மாத இறுதியில் மொரிஷியஸ் தீவின் கிழக்கு கரையில் உள்ள பாயிண்ட் டி எஸ்னிக்கு கப்பல்ஒன்று வந்துள்ளது. எம்.வி வகாஷியோ என்ற அந்த கப்பல் சுமார் 4000 டன் எரிபொருளுடன் மொரிஷியஸ் அருகே பவளப்பாறைகள் நிறைந்த பகுதியைக் கடக்கும்போது, விபத்துக்குள்ளானது. இதில் கப்பல் கடுமையாக சேதமடைந்து, அதிலிருந்த எரிபொருள் கடலில் கசிந்து வருகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கடல் முழுவதும் எண்ணெய் படர்ந்து கருமையாக மாறியுள்ள நிலையில்,
இதனைச் சுத்தப்படுத்த அந்நாடு கடுமையாக போராடி வரும் நிலையில், மொரிஷியஸ் பிரதமர் பிரசாந்த் ஜுக்னாத் ஆகஸ்ட் 7 அன்று சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்த சூழலில், கடற்கரை நோக்கி படையெடுத்துள்ள பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் இந்த எண்ணெய்யை நீக்குவதற்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். பவளப்பாறைகள், ஏராளமான கடல் உயிரினங்களைக் கொண்ட இப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய் கசிவு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)