பாகிஸ்தானில் மூன்று மாதத்தில் மறுதேர்தல் நடைபெறும்... மவுலானா பேச்சு...

பாகிஸ்தானில் அடுத்த மூன்று மாதத்தில் மறுதேர்தல் நடைபெறும் என பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் மவுலானா பேசியுள்ளார்.

maulana fazlur rahman claims pakistan will face re election in three months

இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற சூழலில், அந்நாடு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனை காணமாக முன்வைத்து இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாஸ்ல் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மவுலானா ஃபஸ்லர், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். அடுத்த மூன்றுமாதங்களில் பாகிஸ்தானில் மறுதேர்தல் நடைபெறும். அதன்பின் நாட்டின் அரசியல் சூழல் வெகு விரைவில் மாறும்” என தெரிவித்தார்.

imran khan Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe