உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 36 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1500- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 46,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தன் நாட்டு மக்களை முகக் கவசம் அணிந்து வெளியே வரும்படி உத்தரவிட்டுள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
அரபு நாடான அமீரகத்தில் கரோனா வைரஸ் அதிகப்படியான அளவு இருப்பதனால், அந்நாட்டு மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்துகொண்டு வெளியே வர வேண்டும் என்று அந்நாட்டு அரசு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு தற்போது வெளியே சென்று வருகிறார்கள். இதனால் முகக் கவசத்தின் தேவைஅதிகரித்து,அந்நாட்டில் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுத் தனியார் நிறுவனம் ஒன்று என்-95 மாஸ்க் போன்றே முப்பரிமாண முகக் கவசங்களை உருவாக்கியுள்ளது. எளிதில் கிருமி நீக்கம் செய்து அதனை மீண்டும் பயன்படுத்தும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்கில் உள்ள வடிகட்டி போன்ற அமைப்பை எளிதில் மாற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த முகக் கவசங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.