Advertisment

மீண்டும் வரும் அயர்ன்மேன்..! உற்சாகத்தில் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்...

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மாபெரும் வெற்றி பெற்று உலக அளவில் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

Advertisment

marvel avengers video game details leaked online

தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவெஞ்சர்ஸ் வரிசை படங்களை பார்த்து வந்த ரசிகர்களை கண்கலங்க வைத்தது படத்தின் பல காட்சிகள். குறிப்பாக டோனி ஸ்டார்க்கின் கடைசி காட்சியில் பல ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். சீனாவில் இந்த காட்சியை கண்ட ஒரு பெண் தொடர்ந்து அழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு சென்றார். அந்த அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கும் அயர்ன் மேன் அந்த படத்தின் கடைசியில் இறப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் கடைசியாக பேசிய "லவ் யூ 3000 டைம்ஸ்" என்ற வசனம் சமூகவலைதளத்தில் வைரலானது.

Advertisment

இந்நிலையில் அயர்ன் மேன் கதாபாத்திரம் திரும்ப வரவுள்ளது என்ற செய்தி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் திரைப்படம் வாயிலாக இல்லாமல் வீடியோ கேம் வழியாக வரவிருக்கிறது. "மார்வெல் அவெஞ்சர்ஸ்" என பெயரிடப்பட்டுள்ள இந்த கேம் குறித்த விபரங்கள் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் இது குறித்த ட்ரைலர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

மேலும், திரைப்படம் போல குறிப்பிட்ட திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேமில் ஒருவரோ அல்லது பலரோ இணைந்து விளையாடலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்கள், மற்றும் சக்திகளை தேர்ந்தெடுத்து விளையாடலாம். தேவை ஏற்படும்போது ஒன்றாக இணைந்து எதிரிகளை அழிக்கலாம் எனவும், இதில் அவெஞ்சர்ஸ் வரிசையில் வந்த அனைத்து சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் இந்த செய்தியை வைரலாகி வருகின்றனர். மேலும் இப்போதே பல ரசிகர்கள் இந்த வீடியோ கேமை வாங்க எப்படி முன்பதிவு செய்வது என்றும் ஆராய ஆரம்பித்துவிட்டனர்.

avengers ironman marvels
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe